Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடியிருப்பு புளோக்கில தீ மூட்டப்பட்டது... மாணவர்கள் மீது சந்தேகம்

வாசிப்புநேரம் -

காவல்துறையினர் சிராங்கூன் நார்த்திலுள்ள குடியிருப்பு புளோக் ஒன்றில் தீ மூட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். 

அங்கு அனைத்துலக பிரெஞ்சுப் பள்ளி மாணவர்கள் வேண்டுமென்றே தீ மூட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இம்மாதம் 13ஆம் தேதியன்று பிற்பகல் 3.15 மணிவாக்கில் மாணவர்கள் சிலர் சிராங்கூன் நார்த் அவென்யூ 1இல் இருக்கும் புளோக் 157இல் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாகக் குடியிருப்பாளர் ஒருவர் காவல்துறையிடம் புகார் செய்தார். 

காவல்துறையினர் இடத்தை அடைந்ததும் மாணவர்கள் ஓடிவிட்டதாக நம்பப்படுகிறது. 

அங்குத் தீயில் எரிக்கப்பட்ட தாள் துண்டுகள் காணப்பட்டன. சுவரின் அருகில் தீ மூட்டப்பட்டதால் அதன் ஒரு சிறிய பகுதி சேதமடைந்தது போல்  தெரிந்தது. எரிக்கப்பட்ட தாள்துண்டுகள் புளோக் வெற்றிடத்தைச் சுற்றியும் இருந்தன. 

குடியிருப்பாளர்களில் ஒருவரான திரு ஹென்ரி இங் (Henry Ng) அந்த மாணவர்களின் செயல் குறித்துத் தமது Facebook பக்கத்தில் சில காணொளிகளையும் கருத்துகளையும் பதிவேற்றம் செய்தார். 

மாணவர்கள் சண்டை போடும் காட்சியைக் காட்டிய காணொளி ஒன்று அவற்றில் இருந்தது. 

பள்ளி மீது பயமே இல்லை, அவர்களுக்கு. அடிக்கடி இங்கு வந்து வெற்றிடத்தை நாசம் செய்கிறார்கள் 

என்று அவர் குறைகூறினார். 

சம்பவம் குறித்துப் பள்ளியுடனும் காவல்துறையுடனும் இணைந்து செயல்படுவதாக அல்ஜுனீட்-ஹவ்காங் நகர மன்றப் பிரதிநிதி தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்