Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சுத்தமான வீட்டில் சத்தமில்லாமல் வசிக்கும் வேண்டாத விருந்தாளி... காற்றே புகமுடியாத இடத்தில் மாயமாய்த் தோன்றும் கரப்பான்பூச்சி...

வாசிப்புநேரம் -

டைனோசார் வாழ்ந்த காலத்தில் கரப்பான்பூச்சிகளும் இருந்தனவாம்...
உலகில் ஆக நீண்டகாலமாக இருந்துவரும் விலங்கினங்களில் ஒன்று அது என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

  • உலகில் 4,500க்கும் மேற்பட்ட கரப்பான்பூச்சி இனங்கள் இருக்கின்றன.
  • அவற்றில் 30 வகைகள் மனிதர்கள் வாழும் இடத்தில் காணப்படுபவை.
காற்றே புகமுடியாத இடங்களில் கரப்பான்பூச்சிகள் இருப்பதை நம்மில் பலரும் பார்த்ததுண்டு... எப்படித் தான் வருகின்றன?
அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் (Cornell University) சேர்ந்த ஆய்வாளர்கள் கௌஷிக் ஜெயராம், ராபர்ட் J. ஃபுல் (Robert J. Full) என்ன கண்டறிந்தனர்?
(படம்: Reuters)

வியக்கவைக்கும் கரப்பான்பூச்சி...

  • கரப்பான்பூச்சிகள் அவற்றின் உடல் எடையைவிட 900 மடங்கு கனமான பாரத்தைத் தாங்கக்கூடியவை.
  • அவற்றின் உடல் நீளத்தில் கால்பகுதி அளவுள்ள சிறிய துளைக்குள் எளிதில் நுழையக்கூடியவை
  • மிகச் சிறிய இடங்களுக்குள் நுழைந்தவுடன் அதன் உடல் நீளத்தைவிட 20 மடங்கு நீண்ட தூரத்துக்கு அதிவேகத்தில் நகரக்கூடியது
  • சிறிய துளைக்குள் வேகமாக நகரும்போது அதன் மீதான இறுக்கத்தின் அளவு அதன் உடல் எடையைவிட மும்மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமை கரப்பான்பூச்சியிடம் உள்ளது.
சிங்கப்பூர்ச் சூழலில் வீட்டுக்குள் கரப்பான்பூச்சி நுழைவது...
  • பழைய வீடமைப்பு வளர்ச்சிக்கழக வீடுகளின் குப்பைக் குழாய் (rubbish chute) வீட்டுக்குள் இருக்கிறது. அதன்வழியே கரப்பான்பூச்சிகள் நுழையலாம் என்கிறார் பூச்சி ஒழிப்பு நிபுணர் லீ ஹோக் சுவா.
  • எப்படித்தான் குப்பைக் குழாயை மிக இறுக்கமாக மூடினாலும் அதில் இருக்கும் சிறு துளைவழியாகக் கரப்பான்பூச்சிகள் வீட்டுக்குள் நுழைகின்றன என்று விளக்கினார் அவர்.
  • கீழ்மாடிகளில் இருக்கும் வீட்டுக்குள் சன்னல் வழியாகவும் சில கரப்பான்பூச்சிகள் புகுந்துவிடுகின்றன.
  • பக்கத்துவீடுகளில் இருக்கும் கரப்பான்பூச்சிகள் நம் வீட்டுக்குள் நுழையலாம் என்கிறார் திரு சுவா.
வீட்டுக்குள் இருக்கும் கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கையை எப்படிக் கட்டுப்படுத்துவது.

3 எளிய முறைகளில் அவற்றை அகற்றலாம் என்கிறது FairPrice அமைப்பு...
  1. கரப்பான்பூச்சிகள் அதிகம் இருக்கும் இடங்களைக் கண்டறியுங்கள்
  2. அவை இனப்பெருக்கம் செய்யும் இடத்தை அகற்றவோ மறைக்கவோ முயற்சி செய்யலாம்... அவற்றுக்கு எந்தவித உணவும் கிடைக்கமுடியாத அளவுக்குச் சுத்தப்படுத்தவேண்டும்
  3. கரப்பான்பூச்சிகளைக் கொல்லும் சாதனங்களைப் பொருத்தலாம்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்