சிங்கப்பூர் trending
புதிய iPhone திறன்பேசியை வாங்க விடிவதற்கு முன்பே வரிசை
படம்: 8 World/Colin Low
This audio is generated by an AI tool.
சூரியன் இன்னும் உதிக்கவில்லை...
ஆர்ச்சர்ட் ரோட்டில் கடைகள் இன்னும் திறந்திருக்காமல் இருக்கலாம்...
ஆனால் 100க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
Apple கடைக்கு வெளியே..
அனைவரும் புதிய iPhone திறன்பேசியை வாங்கக் காத்திருந்தனர்.
இன்று iPhone 18 Pro, iPhone 18 Pro Max ஆகிய கைத்தொலைபேசிகள் விற்பனைக்கு விடப்படுகின்றன.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட படங்களில் கடைக்கு வெளியே தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
வாடிக்கையாளர்கள் பலர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
சிலர் தரையில் படுத்திருப்பதைப் படங்களில் பார்க்கமுடிகிறது.
iPhone 18 Pro கைத்தொலைபேசியின் விலை 1,899 வெள்ளி முதல் தொடங்குகிறது.
iPhone 18 Pro Max ரகம் 2,099 வெள்ளி முதல் விலைபோகிறது.
iPhone 18இன் சாதாரணமான ரகம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Apple நிறுவனத்தின் முதல் மடக்கக்கூடிய திறன்பேசியான iPhone Duo அடுத்த மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
அதன் விலை 3,099 வெள்ளி முதல் தொடங்கும்.