சிங்கப்பூரர் - வெளிநாட்டவர் இணக்கம் முக்கியம்: IPS ஆய்வு
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்துக்கு வெளிநாட்டினர் ஒருங்கிணைப்பு முக்கியமான அம்சம் என்று கொள்கை ஆய்வுக் கழகம் (Institute of Policy Studies) தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குக் கூடுதல் வளங்களை ஒதுக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.
வேலை, அடையாளம் முதலியவற்றில் வெளிநாட்டினருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதைக் கழகம் சுட்டியது. ஆனால் வேறுபாடுகளைக் களையக் கலந்துரையாடல்கள் உதவுவதாக அது சொன்னது.
அரசாங்கத்தின் கொள்கைகள் மூலம் குடியேறிகள் தொடர்பான அக்கறையைச் சீராக்க முடியும். ஆனால் அவற்றின் மூலம் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் உருவாக்க முடியாது என்று ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.