"ஈரான்-இஸ்ரேல் பூசல் நீடித்தால் வர்த்தகச் செலவுகளும் வாழ்க்கைச் செலவினமும் அதிகரிக்கலாம்"
வாசிப்புநேரம் -

Reuters
இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையே அதிகரிக்கும் பதற்றம் அனைத்துலக அளவில் பணவீக்கத்தை மோசமாக்கக்கூடும் என்று சந்தை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கச்சா எண்ணெயின் விலை 5 மாதம் காணாத உச்சத்தை எட்டியுள்ளதை அவர்கள் சுட்டினர்.
உள்ளூர்ப் பொருளாதாரம் மீதான பாதிப்பு தற்போது குறைவு என்றபோதிலும் பூசல் நீடித்தால் வர்த்தகச் செலவுகளும் வாழ்க்கைச் செலவினமும் அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
சண்டை நடக்கும் இடத்திற்கு அருகே சிங்கப்பூருக்கு அதிக வர்த்தக உறவு இல்லை என்பதால் சிங்கப்பூர்ப் பொருளாதாரம் மீதான பாதிப்பு இப்போதைக்குக் குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.
ஆனால் சிங்கப்பூருடன் வர்த்தக உறவைக் கொண்டுள்ள மற்ற பொருளாதாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று அவர்கள் கூறினர்.

ஆதாரம் : Others