Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 13 பேர் கைது

வாசிப்புநேரம் -
சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 13 பேர் கைது
படம்: சிங்கப்பூர்க் காவல்துறை
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சட்டவிரோத அமைப்புகளில் உறுப்பினர்களாய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 13 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 21 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

காவல்துறை அதிகாரிகளின் துணையோடு குற்றப் புலனாய்வுத் துறை தீவெங்கும் சோதனை மேற்கொண்டது.

கடந்த மாத இறுதியில் கேளிக்கை விடுதி, இரவு விடுதி உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 100 பேரை அதிகாரிகள் சோதித்தனர்.

பிடிபட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

சட்டவிரோத அமைப்புகளில் உறுப்பினராய் இருக்கும் குற்றத்துக்கு அதிகபட்சம் 3 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்