Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பசுமை எரிசக்தித் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவும் அனைத்துலகத் தளத்திற்குப் பங்களிக்கவிருக்கும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
பசுமை எரிசக்தித் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவும் அனைத்துலகத் தளத்திற்குப் பங்களிக்கவிருக்கும் சிங்கப்பூர்

(Image: World Economic Forum)

சிங்கப்பூர், பசுமை எரிசக்தித் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவும் அனைத்துலகத் தளத்திற்குப் பங்களிக்கவிருக்கிறது.

First Movers Coalition எனும் கூட்டணியில் அது இணைந்துள்ளது.

கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றும் துறைகளுக்கான தீர்வுகளைக் கூட்டணி ஆராயும்.

சென்ற ஆண்டு நவம்பரில் நடைபெற்ற COP26 உலகத் தலைவர்கள் மாநாட்டில் அது குறித்து முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.

பொருளியலைப் பசுமையாக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று எனப் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் கூறினார்.

வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு. ஈஸ்வரன், வர்த்தக ரீதியில் சிங்கப்பூருக்கான முன்னுரிமைகளையும் கோடிக்காட்டினார்.

அனைத்துல அளவில் பதிவாகும் வெப்பவாயு வெளியேற்றத்தில் சிங்கப்பூரின் பங்கு 0.1 விழுக்காடு.

ஆனால் 'பசுமைத் திட்டம் 2030' போன்ற முயற்சிகளின் வழியாக முற்றிலும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவது முக்கியம் என்றார் அவர்.

அந்த இலக்கை அடைய, மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதும் மிக முக்கியம் என்று அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளின்பொருளியல், வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருக்கின்றன.

அதனால் மற்ற நாடுகளுடன் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வது முக்கியம்.

அதனால் சிங்கப்பூர், பசுமைப் பொருளியல், மின்னிலக்கம் உள்ளிட்ட துறைகளில் தடையற்ற வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ளப் பணியாற்றிவருவதாக அமைச்சர் ஈஸ்வரன் சொன்னார்.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa