Skip to main content
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் புதிய இடம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் புதிய இடம்

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் புதிய இடம்

படம்: ItsRainingRaincoats

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Oct 2026 04:40PM புதுப்பிப்பு : 11 Oct 2026 10:54PM
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் ItsRainingRaincoats அமைப்பு அதன் விரிவுபடுத்தப்பட்ட தளத்தைத் திறந்துள்ளது.

217 ஹெண்டர்சன் ரோட்டில் (Henderson Road) உள்ள தளத்தில் விரிவுபடுத்தப்பட்ட இன்ஸ்பைர்ர் (InspIRRe) கடையும், புதிய சமூக நிகழ்ச்சி இடமான கேதரும் (GathIRR) அமைந்துள்ளன.

இலவசப் பொருள்களை வழங்கும் InspIRRe கடையின் பரப்பளவு சுமார் 900 சதுர அடியிலிருந்து 1,300 சதுர அடியாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் மாதந்தோறும் பொருள்களைப் பெற வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை 400லிருந்து 800ஆக உயர்த்த முடியும்.

ஆடைகள், அன்றாடத் தேவைக்கான பொருள்கள் உள்ளிட்ட நன்கொடைப் பொருள்களை ஊழியர்கள் இலவசமாகப் பெறலாம்.

புதிய தளத்தில் கணினி வசதியும் விளையாட்டுப் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

மூன்றாம் மாடியில் 1,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் GathIRR அமைந்துள்ளது.

அங்கு கல்விப் பயிலரங்குகள், கலைப் பயிற்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

பள்ளிகள், நிறுவனங்கள், தொண்டூழியர்கள், சமூக அமைப்புகளும் அந்த இடத்தைப் பயன்படுத்தலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள் கற்கவும் பழகவும் ஒன்றுகூடவும் இந்த விரிவாக்கம் கூடுதல் வாய்ப்பளிக்கும் என்று அமைப்பு தெரிவித்தது.
Related article image
படம்: ItsRainingRaincoats
Related article image
படம்: ItsRainingRaincoats
Related article image
படம்: ItsRainingRaincoats
Related article image
படம்: ItsRainingRaincoats
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்