Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை வைத்துப் படமெடுத்த பாதுகாவல் அதிகாரிகளுக்குச் சிறை

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கியை மற்றொருவரிடம் காட்டியவாறு படமெடுத்த பாதுகாவல் அதிகாரிகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

23 வயதான அவ்விருவர் மீதும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதியின்றிப் படங்கள் எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவ்வாறு படமெடுக்க யோசனை தந்து அதற்கு உடந்தையாக இருந்த முகமது நூர்அர்மான் ஷா அன்வாருக்கு (Muhammad Noorarman Shah Anwar) 4 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தப் படங்களை எடுத்த முகமது அமாலி அப்துல் ஹலிமுக்கு (Muhammad Amali Abdul Halim) ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சம்பவம் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடந்தது.

கார்களையும் மோட்டார்சைக்கிள்களையும் சோதனையிடும் பணியிலிருந்தபோது அவர்கள் துப்பாக்கியை வைத்து ஆபத்தான முறையில் படங்களையும் காணொளியையும் எடுத்தனர்.

அவற்றை நூர்அர்மான் தமது Instagram பக்கத்தில் பதிவேற்றிப் பின்னர் அகற்றினார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு அவ்விருவரின் செயல் குறித்து அவர்களது அதிகாரி காவல்துறையில் புகார் தந்தார்.

பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதியின்றிப் படம் எடுக்கும் குற்றத்துக்கு அதிகபட்சம் ஈராண்டுகள் சிறை, 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்