Skip to main content
மரணத்தை விளைவித்த ஓட்டுநருக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மரணத்தை விளைவித்த ஓட்டுநருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
மரணத்தை விளைவித்த ஓட்டுநருக்குச் சிறை
படம்: CNA/Alyssa Tan
சிங்கப்பூரில் லாரியை இடது பக்கத்திலிருந்து தாண்டி மோட்டார்சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

59 வயது சுவா எங் கியோங்கிற்கு (Chua Eng Keong) 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது.

விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி தீவு விரைவுச் சாலையில் (PIE) அனாக் புக்கிட் மேம்பாலச் சாலை (Anak Bukit Flyover) வழியே சுவாவின் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அது மூன்றாம் தடத்தில் இருந்தது.

லாரி இரண்டாம் தடத்திலும் மோட்டார்சைக்கிள் முதல் தடத்திலும் இருந்தன.

முதல் தடம் விரைவுச்சாலையின் ஆக வலது புறத்தில் இருக்கும்.

லாரியைத் தாண்டிச் செல்ல சுவா லாரியின் இடது பக்கம் வேகமாக வாகனத்தைத் திருப்பினார்.

அப்போது சரியாகப் பார்க்காமல் வெட்டினார்.

அதே நேரத்தில் மோட்டார்சைக்கிள் முதல் தடத்திலிருந்து 2ஆம் தடத்திற்கு மாறியது.

சுவாவின் கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியபோது அது 2ஆம் தடத்தில் இருந்தது.

35 வயது மோட்டார்சைக்கிளோட்டி முகமது ஸுல்ஹில்மி முகமது ரொஸ்லான் சாலையில் விழுந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மாண்டார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்