Skip to main content
புலாவ் புக்கோம் எரிபொருள் திருட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புலாவ் புக்கோம் எரிபொருள் திருட்டு - காவல்துறையிடம் பொய் சொன்ன ஆடவருக்குச் சிறைத் தண்டனை

வாசிப்புநேரம் -
Shell நிறுவனத்தின் புலாவ் புக்கோம் (Pulau Bukom) எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து எரிபொருள் திருடியதன் தொடர்பில் காவல்துறையிடம் பொய் சொன்ன ஆடவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எங்கு இருக்கின்றனர் என்பது பற்றி அவர் காவல்துறையிடம் பொய் சொல்லியிருக்கிறார்.

நீதிக்கு இடையூறு விளைவித்ததாக 53 வயது வோங் வாய் செங் (Wong Wai Seng) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதை அவர் ஒப்புக்கொண்டார்.

2007இலிருந்து 2018ஆம் ஆண்டுக்கு இடையே ஊழியர்கள் எரிபொருளைத் திருடியதாகக் கூறப்பட்டது.

எரிவாயுத் திருட்டை நடத்தியதாக நம்பப்படுவோரில் ஒருவரான,
ஜுவான்டி புங்கொட் (Juandi Pungot) குறைந்தது 5.6 மில்லியன் வெள்ளி பெறுமான எரிபொருளைத் தவறாய்ப் பயன்படுத்தியதை இவ்வாண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்