விமானச் சிப்பந்தியிடம் ஆபாசமாக நடந்துகொண்ட ஆடவருக்குச் சிறை

(படம்: Envato Elements)
விமானச் சிப்பந்தியிடம் ஆபாசமாக நடந்துகொண்ட 23 வயது ஆடவருக்கு 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரிலியண்ட் ஆங்ஜயா (Brilliant Angjaya) என்பவர் ஜனவரி 23ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அந்த விமானத்தில் அவர் பிறப்புறுப்பு வெளியே தெரியும் வகையில் அமர்ந்திருந்தார்.
ஆங்ஜயாவிடம் உணவு கொடுக்கவந்த விமானச் சிப்பந்தி ஆடவர் காணொளி பதிவுசெய்வதையும் கவனித்தார்.
சிப்பந்தி உடனடியாக மேல் அதிகாரியிடம் தகவல் அளித்தார்.
ஆங்ஜயா பின்னர் சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.