பணிப்பெண்ணைத் தரத் தரவென இழுத்து இடைவாரால் அடித்துக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: CNA/Wallace Woon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தமது வீட்டில் வேலை செய்யும் இல்லப் பணிப்பெண்ணைத் தரத் தரவென இழுத்து, கன்னத்தில் அறைந்து, இடைவாரால் அடித்துக் காயமேற்படுத்திய ஆடவருக்குச் 3 மாதங்கள் 10 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,000 வெள்ளி இழப்பீடு தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நடந்தது என்ன?
கடந்த 2022 செப்டம்பர் முதல் தேதி ஆடவர் பணிப்பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசினார்.
பிறகு அதனை தமது மனைவியிடம் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் அந்த 62 வயது ஆடவர் பணிப்பெண்ணைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பயந்துபோன பணிப்பெண் ஆடவரின் மனைவியிடம் நடந்ததைத் தெரிவித்தார்.
இதனை அறிந்த ஆடவர் செப்டம்பர் 3ஆம் தேதி இல்லப் பணிப்பெண்ணைக் கடுமையாகத் தாக்கினார்.
ஆடவர் தாக்கியபோது பணிப்பெண்ணைக் காப்பற்ற அவரது மனைவி போராடினார்.
பணிப்பெண்ணின் தலையில் ரத்தம் கசிவதாக மனைவி எச்சரித்த பிறகே ஆடவர் அடிப்பதை நிறுத்தினார்.
ஆடவர் ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு மிரட்டல் வழக்கொன்றில் சிறைக்குச் சென்று வந்தவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : CNA