பணிப்பெண் தலையில் சோயா சாஸை ஊற்றிய முதலாளிக்குச் சிறை
வாசிப்புநேரம் -

படம்: CNA/Ili Nadhirah Mansor
சிங்கப்பூரில் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய முதலாளிக்கு 4 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயது நூர்வஹிடா ஜொஹாரி (Noorwahidah Johari) 33 வயது பணிப்பெண் புத்திரி ரிஸ்கி அமெலியா ( Putri Rizki Amelia) மீது மிளகாய்களை வீசியிருக்கிறார்.
புத்திரி இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்.
நூர்வஹிடா போத்தலில் இருந்த Soy Sauce முழுதையும் பணிப்பெண்ணின் தலையில் ஊற்றியிருக்கிறார்.
பணிப்பெண்ணின் இடக் காதையும் அவர் திருகியிருக்கிறார்.
பலவந்தமாய் நடந்துகொண்ட குற்றச்சாட்டையும் தெரிந்தே காயம் விளைவித்த குற்றச்சாட்டையும் நூர்வஹிடா ஒப்புக்கொண்டார்.
நூர்வஹிடா சிங்கப்பூர் நிரந்திரவாசி.
அவருடைய கணவர் புத்திரியை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டு வேலைக்காக நியமித்தார்.
அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி Soy Sauce போத்தல் ஏன் குளிர்சாதனப் பெட்டியில் இல்லை என்று நூர்வஹிடா புத்திரியிடம் கேட்டார்.
அதற்கு போத்தல் பெரிதாக இருந்ததால் அதனைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க முடியவில்லை என்று புத்திரி கூறியிருக்கிறார்.
கோபத்தில் நூர்வஹிடா அந்தப் போத்தலைத் திறந்து Soy Sause-யைப் புத்திரியின் தலையில் ஊற்றினார்.
அதற்குப் பின் நூர்வஹிடா தொடர்ந்து புத்திரியைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி புத்திரி காவல்துறையிடம் புகார் செய்தார்.

ஆதாரம் : CNA