உரிமமின்றிக் காரோட்டிய பெண், உடந்தையாய் இருந்த தோழி - இருவருக்கும் சிறைத்தண்டணை
வாசிப்புநேரம் -
படங்கள்: CNA/Wallace Woon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சாலையில் காவல்துறைச் சோதனை நடப்பதைப் பார்த்ததும், உரிமம் இல்லாமல் காரை ஓட்டிய பெண்ணோடு இருக்கை மாற்றிக்கொண்டுள்ளார் காரின் உரிமையாளர்.
காரை ஓட்டிய 32 வயது சுன் வெய்லின் எஸ்டெல்லாவுக்கு (Sun Weilin Estella) 6 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உரிமம் இல்லாமல் காரை ஓட்டியது, இருக்கை மாறி அமர்ந்து நீதிக்கு இடையூறாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அவரோடு இருக்கை மாறி அமர்ந்த காரின் உரிமையாளரான 29 வயது ஃபோங் யோக் முன்னுக்கு (Fong Yoke Mun) 5 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருவருக்கும் வாகனமோட்ட ஈராண்டுத் தடை விதிக்கப்பட்டது.
சம்பவம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி நடந்தது.
இரு பெண்களும் கேளிக்கை விடுதி ஒன்றில் மது அருந்திவிட்டு பின்னிரவு 3 மணியளவில் அங்கிருந்து கிளம்பினர்.
தலைவலிப்பதாக ஃபோங் கூறியதால் சுன் காரை ஓட்ட முன்வந்தார். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் ஃபோங் அதற்குச் சம்மதித்தார்.
அப்பர் கிராஸ் ஸ்ட்ரீட்டுக்கும் (Upper Cross Street), இயூ தோங் சென் ஸ்ட்ரீட்டுக்கும் (Eu Tong Sen Street) இடைப்பட்ட சாலைச் சந்திப்பைக் கடக்கும்போது சுமார் 100 மீட்டர் தூரத்தில் காவல்துறை சோதனை நடப்பதை சுன் கவனித்தார்.
உடனடியாகக் காரைப் பின்னோக்கிச் செலுத்தி இயூ தோங் சென் ஸ்ட்ரீட்டில் வளைந்து ஹில் ஸ்ட்ரீட்டை (Hill Street) நோக்கிக் காரை ஓட்டினார்.
காவல்துறை அதிகாரிகள் அதைக் கவனித்துக் காரைப் பின்தொடர்ந்தனர்.
பின்னர் இயூ தோங் சென் ஸ்ட்ரீட், நார்த் கெனல் ரோடு (North Canal Road) சாலைச் சந்திப்பில் சுன்னும் ஃபோங்கும் இருக்கை மாற்றிக்கொண்டனர்.
அதைக் கவனித்த காவல்துறை அதிகாரிகள் காரை நிறுத்தி இருவரையும் தனித்தனியாக விசாரித்தனர்.
இருவரும் இருக்கை மாற்றிக்கொண்டதாக ஒப்புக்கொண்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தான செயல் என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : CNA