சைனா டவுனில் புதிய இந்திய முஸ்லிம் மரபுடைமைப் பகுதி
வாசிப்புநேரம் -
படம்: MUIS
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் வக்காஃப் (waqf) பாரம்பரியத்தை பறைசாற்றும் புதிய ஜாமே சூலியா மரபுடைமைப் (Jamae Chulia Heritage) பகுதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
வக்காஃப் அறக்கட்டளை நிலத்தில் மரபுடைமைப் பகுதி அமைந்துள்ளது.
சில்லறை வர்த்தகம், உணவு பானக் கடைகள், வசதிகளுடன் கூடிய 90 தங்குமிடங்கள் ஆகியவை அங்கிருக்கும்.
இந்திய முஸ்லிம் முன்னோடிகள் வருங்காலத் தலைமுறையினரின் வளர்ச்சிக்காக அறக்கட்டளையை நிறுவினர்.
சூலியா பள்ளிவாசல், அல் அப்ரார் பள்ளிவாசல், நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் ஆகியவை வக்காஃப் ஜாமேயின் கீழ் பயன்பெறுகின்றன.
புதிய வளாகம் அறக்கட்டளையின் நிர்வாகத்துக்கும் சமூகத்தும் நீண்ட காலத்துக்குப் பங்காற்றும் என்று நம்பப்படுகிறது.
புதிய மரபுடைமைப் பகுதி நான்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கடைவீடுகளை ஒன்றிணைக்கிறது.
அதன் சுவர்களில் முன்னோடி இந்திய முஸ்லிம் சமூகத்தினரைப் பற்றிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
வரலாற்றை எடுத்துக்கூறும் பல அம்சங்களையும் வளாகத்தில் காணலாம்.
முன்னோடிகளால் ஒப்படைக்கப்பட்ட அம்சங்களைப் புதிய தலைமுறையினர் பாதுகாத்து புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை மரபுடைமைப் பகுதி எடுத்துரைக்கும் என்று நம்புவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) கூறினார்.
சைனாடவுனில் அமைந்துள்ள பகுதியைத் திறந்துவைக்கும்போது அவர் பேசினார்.

ஆதாரம் : Mediacorp Seithi