Skip to main content
ஹிரோஷிமா அணுக்குண்டுத் தாக்குதல் நடந்து 81 ஆண்டுகள் நிறைவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஹிரோஷிமா அணுக்குண்டுத் தாக்குதல் நடந்து 81 ஆண்டுகள் நிறைவு

வாசிப்புநேரம் -
ஹிரோஷிமா அணுக்குண்டுத் தாக்குதல் நடந்து 81 ஆண்டுகள் நிறைவு

படம்: AP/Mizuki Sakai

வெளியீடு : 06 Aug 2026 02:59PM புதுப்பிப்பு : 06 Aug 2026 03:18PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜப்பானின் ஹிரோஷிமா (Hiroshima) நகரில் அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 81 ஆண்டாகிறது.

அமெரிக்கா ஜப்பானைத் தாக்கியது.

உலக வரலாற்றில் அணுவாயுதம் பயன்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை.

1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்த தாக்குதலில் ஹிரோஷிமா நகரம் தரைமட்டமானது, பல்லாயிரம் பேர் மடிந்தனர்.

அந்த ஆண்டின் இறுதியில் வெடிப்பு, தீக்காயம், கதிரியக்கம் ஆகியவற்றால் ஹிரோஷிமா நகரில் சுமார் 140,000 பேர் மாண்டனர்.

ஹிரோஷிமா அமைதி நினைவுப்பூங்காவில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அணுவாயுதம் இல்லாத உலகம் வேண்டும் மீண்டும் குரல் கொடுத்தனர்.

ஹிரோஷிமா தாக்கப்பட்டு மூன்றுநாள் கழித்து (ஆகஸ்ட் 9) மற்றோர் அணுக்குண்டுத் தாக்குதல் நாகசாக்கி (Nagasaki) நகரில் நடத்தப்பட்டது.

அதில் சுமார் 70,000 பேர் மாண்டனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது; இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது.
அதில் சுமார் 70,000 பேர் மாண்டனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது; இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்