Skip to main content
"ஒரு கிலோ முன்பு $30. இப்போது $80!" மல்லிகையின் திடீர் விலை உயர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"ஒரு கிலோ முன்பு $30. இப்போது $80!" மல்லிகையின் திடீர் விலை உயர்வு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மல்லிகைப் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வழக்கமாக ஒரு சிறிய மல்லிகைப்பூ மாலை 2.50 வெள்ளி முதல் 3 வெள்ளி வரை விற்கப்படும்.

பெரிய மாலை 5 வெள்ளிக்கு விற்கப்படும்.

ஆனால் அண்மையில் ஒரு சிறிய மாலை 4 வெள்ளி வரை விற்கப்படுகிறது. பெரிய மாலை 6 வெள்ளிக்கு விற்பனையாகிறது.

காரணத்தைக் கண்டறிய சென்றது 'செய்தி'.

"மழை, வெள்ளம்"

மழைக்காலம், வெள்ளம் ஆகிய காரணங்களால் மல்லிகைப்பூக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதாகப் பூக்கடைக்காரர்கள் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

"நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் மழைக்காலமாக இருக்கும். மல்லிகைப் பூக்களின் விளைச்சல் அதிகம் இருக்காது. அதனால் விலைவாசி அதிகமாக இருக்கும்" என்றார் பூக்கடைக்காரர் திருவாட்டி கண்ணகி.
Related article image
"தேவை அதிகம்"

சிங்கப்பூரில் மல்லிகைப்பூவுக்குத் தேவை எப்போதும் இருந்துவருவதாகக் கூறினர் பூக்கடைக்காரர்கள்.

இது கல்யாணக் காலம். திருமணங்கள் நிறைய நிகழ்கின்றன.

வழக்கத்தைவிட மல்லிகைப்பூக்களுக்குத் தேவை அதிகமாக இருப்பதாய்க் கூறினார் பூக்கடைக்காரர் திரு பாஸ்கரன்.

மக்களுக்குத் தேவை இருக்கிறது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடைக்காரர்கள் அதிக விலை கொடுத்துப் பூக்களை வாங்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
Related article image
அண்மையில் ஒரு கிலோகிராம் மல்லிகைப்பூ 80 வெள்ளிக்கு விலைபோனதாகப் பூக்கடைக்காரர் திரு முத்து குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு ஒரு கிலோகிராம் மல்லிகைப்பூ 30 வெள்ளிக்கு விற்கப்பட்டது.

மழையால் விளைச்சல் குறைவு, தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை உயர்ந்ததாகக் கூறினார் திரு முத்து.
Related article image
"வாடிக்கையாளர்கள் சிலர் புரிந்துகொள்வதில்லை"

இந்தியாவிலிருந்து வரும் பூக்களின் விலை அதிகரிப்பதால் வேறு வழியின்றி பூக்களை அதிக விலையில் விற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகப் பூக்கடைக்காரர் அமுதா குறிப்பிட்டார்.
Related article image
ஆனால் வாடிக்கையாளர்கள் சிலர் அதைப் புரிந்துகொள்வதில்லை என்றார் அவர்.

ஒரு சில பூக்கடைக்காரர்கள் பழைய விலைக்கே பூக்களைத் தருகின்றனர். வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் அப்படிச் செய்வதாக அவர்கள் கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்