Skip to main content
ஜொகூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஜொகூர் - சிங்கப்பூர் வீட்டு உதவித்தொகை மோசடி: எச்சரிக்கும் காவல்துறை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூர் - சிங்கப்பூர் இடையே அமைந்திருக்கும் வீடுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற போலி விளம்பரம் குறித்துக் காவல்துறை எச்சரிக்கிறது.

Facebook போன்ற தளங்களில் 'JBSG Housing Subsidy Program' அல்லது 'Free Homes Across the Causeway' என்ற பெயரில் விளம்பரங்களைக் காண முடிகிறது.

அவை அனைத்தும் மோசடி என்று காவல்துறை சொன்னது.

புதிய திட்டத்தின் மூலம் பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயல்வதாகப் போலிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் இரு நாட்டுப் பிரதமர்களின் போலிக் கையெழுத்தும் காணப்பட்டது.

ஒருவர் படிவத்திலுள்ள இணைப்பை அழுத்தினால் மோசடிக் கும்பல் அவரிடம் நேரடியாகப் பேசும்.

அடையாள எண், முகவரி முதலிய தனிபட்ட தகவல்கள் அல்லது பணத்தைப் பெற மோசடிக் கும்பல் முயல்வதாகக் காவல்துறை கூறியது.

மலிவான விலையில் வீடு வாங்கும் திட்டம் நடப்பில் இல்லை என்றும் பொதுமக்கள் கவனமாய் இருக்கவேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்