Skip to main content
Jetstar Asia முடிவுக்கு வருகிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Jetstar Asia முடிவுக்கு வருகிறது

வாசிப்புநேரம் -
Jetstar Asia முடிவுக்கு வருகிறது

(கோப்புப் படம்: Kyodo/via REUTERS)

Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் அடுத்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி நிறுத்தப்படும்.

அதன் மூலம் சுமார் 326 மில்லியன் வெள்ளி பணம் பெற முடியும் என்றும் அந்தப் பணம் விமானங்களைப் புதுப்பிக்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்குச் சொந்தமான Jetstar Asia சிங்கப்பூரிலிருந்து இயங்குகிறது.

Jetstar Asiaவின் 13 Airbus A320 விமானங்கள் கட்டங்கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலந்துக்கும் மாற்றிவிடப்படும் என்று Qantas கூறியது.

அதிகரிக்கும் விநியோகச் செலவுகள், விமான நிலையங்களில் உயர்ந்திருக்கும் கட்டணங்கள், கூடுதல் போட்டி ஆகியவற்றால் Jetstar Asia பாதிக்கப்பட்டது.

விநியோகச் செலவுகள் சுமார் 200 விழுக்காடு உயர்ந்திருப்பதாய் Jetstar Asia தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

Jetstar Asia சேவையை Qantas சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

முன்கூட்டியே விமானச்சீட்டு வாங்கியிருந்த வாடிக்கையாளர்களுக்குப் பணம் முழுவதும் திருப்பிக் கொடுக்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமானச் சேவைகளை வழங்குவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்