Skip to main content
Jetstar Asia ஊழியர்களுக்கு SIA வேலை வாய்ப்பு?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Jetstar Asia ஊழியர்களுக்கு SIA வேலை வாய்ப்பு?

வாசிப்புநேரம் -
Jetstar Asia ஊழியர்களுக்கு ஆதரவளிக்கச் செயல்பட்டு வருவதாகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (Ng Chee Meng) தெரிவித்துள்ளார்.

Jetstar Asia ஊழியர்களுக்குச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்யவும் முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஊழியர்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.

முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டிக்கு ஏற்பவே ஊழியர்களுக்குப் பணிநீக்க இழப்பீடு வழங்கப்படுவதாகவும் திரு இங் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் முதல் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸும் e2i அமைப்பும் சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில் ஊழியர்களுக்கு நேரடி ஆதரவை வழங்கப் போவதாக அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்