Skip to main content
Jetstar Asiaவின் இறுதி விமானப் பயணம் இன்று
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Jetstar Asiaவின் இறுதி விமானப் பயணம் இன்று

வாசிப்புநேரம் -
Jetstar Asiaவின் இறுதி விமானப் பயணம் இன்று

படம்: Jetstar Asia

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Jetstar Asia 20 ஆண்டுச் சேவைக்குப் பிறகு அதன் கடைசி விமானப் பயணத்தை இன்று மேற்கொண்டது.

அது குறித்து Jetstar Asia அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தது. மனத்தை நெகிழ வைக்கும் காணொளி ஒன்றையும் வெளியிட்டது.

"2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை சேவையாற்றியதில் பெருமிதம் கொள்கிறோம். Jetstar Asiaவில் இறுதி விமானப் பயணங்களை மேற்கொண்ட எங்கள் ஊழியர்கள் சிலரின் வார்த்தைகள் இதோ...இறுதி முறையாக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணொளியில் விமானச் சிப்பந்திகள் தங்களது பொன்னான தருணங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் சக ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

Jetstar Asia சேவை நிறைவுக்கு வந்தாலும் Jetstar Airwaysஉம் Jetstar Japanஉம் தொடர்ந்து வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்