Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பை அதிகரிக்க முயற்சி

வாசிப்புநேரம் -

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பை மேம்படுத்தப் புத்தாக்க முறைகளைக் கையாள்கிறது. 

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு உதவவும் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் புதிய மின்னிலக்கக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

காங்கிரசின் e2i அமைப்பு  செயற்கை நுண்ணறிவால் இயங்கும் அதன் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டிக் கருவியை மேம்படுத்தும். 

வேலை தேடுவோருக்குப் பொருத்தமான வேலைகளை அடையாளம் காண்பது மேலும் எளிதாகும்.

நிறுவனங்களின் உருமாற்றத் தேவைளை மதிப்பிட்டு அந்தப் பணியில் உதவக் காங்கிரஸ் புதிய கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.

அதே வேளையில் ஊழியர்களின் வேலைகள்,
 திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவி வழங்கப்படும்.  

கடந்த ஆண்டில் புதிதாகச் சுமார் 24,000 பேர் வேலையில் அமர்த்தப்பட்டதாக e2i தெரிவித்தது. 

2023-ஐ விட அது 70 விழுக்காடு அதிகம். 

வேலை தேடுவோருக்கு மேலும் உதவ வாழ்க்கைத் தொழில் கண்காட்சி மரினா பே சாண்ட்ஸ் எக்ஸ்போவில் இன்றும் (10 ஜனவரி) நாளையும் நடைபெறுகிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்