Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஜொகூரிலிருந்து உட்லண்ட்ஸ் செல்லும் முதல் பேருந்து... இனி சீக்கிரமாகத் தொடங்கும்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூர் பாரு சோதனைச்சாவடியிலிருந்து உட்லண்ட்ஸ் செல்லும் முதல் பேருந்துச் சேவை அதிகாலை 4.50 மணிக்கு முன்கூட்டியே தொடங்கவுள்ளது.

புதிய மாற்றம் இம்மாதம் (செப்டம்பர்) 15ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.

பேருந்துச் சேவை நேர மாற்றம் வாரநாள்களுக்கு மட்டுமே பொருந்தும்.

SMRT பேருந்து எண் 950, SBS Transit நிறுவனத்தின் 160, 170, 170X ஆகியவை அந்த மாற்றத்தின் கீழ் வரும்.

தற்போது அந்தப் பேருந்துகளின் சேவை காலை 5 மணிக்குத் தொடங்குகிறது.

காலை உச்ச நேரத்தில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க இந்தப் புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது.

எல்லைகளைக் கடக்கும் பேருந்துச் சேவையை முன்கூட்டியே அதிகாலை 4 மணிக்குத் தொடங்குமாறு அண்மையில் மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பு கேட்டுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்