Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - இந்தியா 60 ஆண்டுகால உறுதியான உறவைக் குறிக்கும் சின்னம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறுதியான உறவை அனுசரிக்கும் வகையில் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முக்கிய மைல்கல்லைக் கொண்டாட இவ்வாண்டு பல நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவற்றைக் குறிக்கும் வண்ணம் அந்தச் சின்னம் இடம்பெற்றிருக்கும்.

சின்னம் இரு நாட்டின் 60 ஆண்டுகால அரசதந்திர உறவைப் பிரதிபலிக்கிறது. அத்துடன் இரு நாடுகளின் அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்திய, சிங்கப்பூர் இருநாட்டுக் கொடிகளின் வண்ணங்கள் சின்னத்தில் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரின் தேசிய மலர் Vanda Miss Joaquim, இந்தியாவின் தேசிய மலர் தாமரை, இரண்டையும் சின்னத்தில் பார்க்கலாம்.

இந்தச் சின்னம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவையும் வரலாற்றையும் குறிக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்