காவல்துறை-வங்கிக் கூட்டு முயற்சி - பறிபோகவிருந்த $51.7 மில்லியன் காப்பாற்றப்பட்டது
வாசிப்புநேரம் -
(படம்: Singapore Police Force)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையமும் DBS, OCBC, SCB, UOB ஆகிய 4 வங்கிகளும் இணைந்து 1,100 மோசடிச் சம்பவங்களைத் தவிர்த்துள்ளன.
அமைப்புகள் 2 மாதங்களுக்குக் கூட்டாகப் பணிபுரிந்தன.
Robotic Process Automation எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிச் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் காவல்துறை நேரம் செலவழிக்கத் தேவையில்லை.
அவர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பப்படுகிறது.
மார்ச் முதலாம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மோசடித் தடுப்பு நிலையமும் வங்கிகளும் 5,600க்கும் அதிகமான குறுஞ்செய்திகளை அனுப்பின.
3,500க்கும் அதிகமான வங்கி வாடிக்கையாளர்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும் என்று அடையாளம் காணப்பட்டது.
பறிபோகவிருந்த 51.7 மில்லியன் வெள்ளி காப்பாற்றப்பட்டது.
நேரத்துடன் செயல்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சேமித்த பணத்தை மோசடிக்காரர்களுக்கு அனுப்புவதைத் தடுக்க முடிந்ததாகக் காவல்துறை சொன்னது.

ஆதாரம் : Others