Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கடனுதவி தேடும் நடுத்தர வயது சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அறிக்கை

வாசிப்புநேரம் -

வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக Lendela எனும் தளத்தின் அறிக்கை கூறுகிறது.

கடன் பெற விரும்புவோரையும் கடன் கொடுப்போரையும் இணைக்கும் தளம் அது.

கடன் பெற விரும்பும் பெரும்பாலானவர்கள் 40 முதல் 59 வயது வரையிலானவர்கள் என்றும் தளம் சொல்கிறது.

வீட்டுத் தேவைகள், மருத்துவச் செலவு, கடன்பற்று அட்டை கடன் ஆகியவற்றைச் சமாளிக்க கடந்த ஈராண்டுகளாகக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் நடுத்தர வயதுக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

நடுத்தர வயதினர்....

ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்பட்ட தகவலில் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்துள்ள 40 முதல் 59 வயதானவர்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு உயர்ந்தது தெரியவந்தது.

அந்த வயதினர் எதிர்பார்க்கும் கடன் தொகையின் அளவு சராசரியாக 22,000 வெள்ளி.

கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் இவர்கள் மூன்றில் ஒரு பங்கு என்றும் கூறப்படுகிறது.

இளையர்கள்.....

கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் 18 முதல் 29 வயது வரையிலான இளையர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டிலிருந்து 25 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனாலும் இன்றுவரை கடனுக்கு விண்ணப்பம் செய்பவர்களில் கால்வாசியினருக்கு மேல் அந்த வயதினராக இருக்கின்றனர்.

2022 முதல் 2024 வரை சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் என சுமார் 200,000 பேரின் விண்ணப்பங்களை உட்படுத்தி கிடைக்கப்பெற்ற தகவல் என்று Lendela தளத்தின் பேச்சாளர் கூறினார்.

கடன் வாங்கக் காரணம்......

சிங்கப்பூரர்கள் கடன் வாங்குவதற்குப் பொதுவான காரணங்களில் ஆறில் 4 வாழ்க்கைச் செலவினத்துடன் தொடர்புடையது என்று அறிக்கை கூறுகிறது.

அவை:

- கடன் ஒருங்கிணைப்பு (30.8 விழுக்காடு)
- கட்டணங்கள் (13.7 விழுக்காடு)
- வீடு, வீட்டுச் செலவு (8.2 விழுக்காடு)
- கடன் பற்று அட்டை (8 விழுக்காடு)
- மறுசீரமைப்பு, வர்த்தகச் செலவுகள் (முறையே 6.3 விழுக்காடு, 5.1 விழுக்காடாகும்)

வேலையில் இருந்து ஓய்வுபெற்ற 60 வயதுக்கும் அதிகமானவர்களில் சுமார் 3 விழுக்காட்டினர் மட்டுமே கடனுதவிக்கு விண்ணப்பம் செய்வதாக அறிக்கை கூறியது.

ஆதாரம் : Today

மேலும் செய்திகள் கட்டுரைகள்