Skip to main content
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் விதிகளை மீறிய 52 வாகனமோட்டிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் விதிகளை மீறிய 52 வாகனமோட்டிகள்

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் விதிகளை மீறிய 52 வாகனமோட்டிகள்
படம்: CNA
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சென்ற ஜூன் விடுமுறைக் காலத்தின்போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 52 பேர் பிடிபட்டனர்.

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதுகுறித்து இன்று (8 ஜூலை) தகவல் வெளியிட்டது.

சோதனைச் சாவடியின் புறப்பாட்டுப் பகுதியில் 45 வாகனமோட்டிகள் பிடிபட்டனர்.

அவர்கள் வரிசையில் முந்திச் சென்றது, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியது போன்ற குற்றத்தைச் செய்தனர்.

அவர்களில் 34 பேர் வாகனத்தைத் திருப்பி மீண்டும் வரிசைக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டது.

வெளிநாட்டில் பதிவான வாகனங்களை ஓட்டிய 11 பேர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாக ஆணையம் கூறியது.

கூடுதல் நடவடிக்கைக்காக 27 பேர் போக்குவரத்துக் காவல்துறையிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சோதனைச் சாவடியின் வருகைப் பகுதியில் 7 வாகனமோட்டிகள் வரிசையில் முந்திச் சென்றனர் அல்லது ஆபத்தான முறையில் வாகனமோட்டினர்.

போக்குவரத்துச் சட்டத்தைப் பின்பற்றுமாறு குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்