ஜூரோங் வீட்டில் கொள்ளை முயற்சி - மூவர் கைது
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
ஜூரோங்கில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது.
சந்தேக நபர்களில் இருவர் 21 வயது ஆடவர்கள். மற்றொருவர் 24 வயதுப் பெண்.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 24 (Jurong East Street 24) புளோக் 262இல் சம்பவம் நடந்தது.
நேற்று முன்தினம் (3 ஏப்ரல்) இரவு 10.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை 8 World செய்தியிடம் தெரிவித்தது.
சந்தேக நபர்கள் வீட்டின் உள்ளேசென்று கதவைப் பூட்டிக்கொண்டனர்.
அவர்கள் ஒரு மணி நேரமாகக் கதவைத் திறக்க மறுத்தனர்.
சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரும் (Special Operations Command), நெருக்கடிகாலப் பேச்சுவார்த்தைப் பிரிவு (Crisis Negotiation Unit) அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
பேரிடர் உதவி, மீட்புக்குழு (DART) அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையாகத் தயார்நிலையில் இருந்தனர்.
11.40 மணியளவில் அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்து மூவரையும் கைதுசெய்தனர்.
அவர்களிடம் விசாரணை தொடர்கிறது.