Tower Transit பேருந்து எண் 98, SBS பேருந்து எண் 99இன் பின்னால் இடித்தது: LTA
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜூரோங் வெஸ்ட் அவென்யூ ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒரு பேருந்து மற்றொன்றின் பின்புறம் மோதியதில் விபத்து நேர்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியுள்ளது.
Tower Transit பேருந்து எண் 98, போக்குவரத்து விளக்கில் நின்று கொண்டிருந்த SBS Transit பேருந்து எண் 99இன் பின்னால் இடித்ததாக ஆணையம் அதன் Facebook பக்கத்தில் கூறியது.
சம்பவத்தில் காயம்பட்ட 44 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
8 World நேயர் அனுப்பிய படத்தில் இரு பேருந்துகள் மோதிக் கொண்டு நிற்பதையும் அருகில் மக்கள் கூட்டம்
நிற்பதையும் காண முடிகிறது.
ஒரு பேருந்தின் முன்புறம் கடுமையாகச் சேதமுற்றது.
சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நடந்தது. SBS Transit, Tower Transit நிறுவனங்கள் காயமடைந்தோர், அவர்களது குடும்பத்தினர் ஆகியோரைத் தொடர்புகொண்டுள்ளன.
அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அவை முயன்றுவருகின்றன.
சம்பவம் குறித்து இரு நிறுவனங்களும் ஆணையமும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

ஆதாரம் : Mediacorp Seithi