Skip to main content
ஜூரோங் பேருந்து விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஜூரோங் பேருந்து விபத்து - விசாரிக்கும் LTA, SBS, Tower Transit

வாசிப்புநேரம் -
ஜூரோங் பேருந்து விபத்து - விசாரிக்கும் LTA, SBS, Tower Transit
படம்: 8world reader
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ (Jurong West Avenue) ஒன்றில் நடந்த விபத்தை SBS Transit, Tower Transit பேருந்து நிறுவனங்களும் நிலப் போக்குவரத்து ஆணையமும் விசாரிக்கின்றன.

அது குறித்து நிறுவனங்களும் ஆணையமும் தங்களுடைய Facebook பக்கங்களில் தெரிவித்தன.

பேருந்துச் சேவைகள் 98,99 ஆகியவை விபத்தில் சிக்கின.

பேருந்துச் சேவை 98-ஐ Tower Transit நிறுவனம் நடத்துகிறது.

பேருந்துச் சேவை 99-ஐ SBS Transit நிறுவனம் நடத்துகிறது.

காயமடைந்த 44 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தால் ஏற்பட்ட காயங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் இரு பேருந்து நிறுவனங்களும் தெரிவித்தன.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்