Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

CMIO எனும் பல இனக் கட்டமைப்பு சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்த அரசாங்கத்துக்கு உதவுகிறது: அமைச்சர் சண்முகம்

வாசிப்புநேரம் -
CMIO எனும் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், மற்ற இனத்தவர்கள் சார்ந்த கட்டமைப்பு, இன வேறுபாடுகளைக் களைந்து சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்த அரசாங்கத்திற்கு உதவுகிறது.

உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவ்வாறு பதிலளித்தார்.

இனம் என்பது பலருக்கு இன்னமும் முக்கிய அடையாள அம்சமாக உள்ளது என்று அவர் சொன்னார்.

அதில் மாற்றம் தேவை என்ற கருத்தை ஒப்புக்கொண்ட அவர், அரசாங்கம் அந்தக் கட்டமைப்பை அவ்வப்போது மறுஆய்வு செய்வதைச் சுட்டினார்.

இன ஒருங்கிணைப்புக் கொள்கை குறித்து தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் முன் வாய் (Leong Mun Wai) கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்