சட்ட அமைச்சர் பொறுப்பைத் துறந்து புதிய பொறுப்பை ஏற்கிறார் கா சண்முகம்
வாசிப்புநேரம் -

படம்: CNA/Marcus Mark Ramos
சிங்கப்பூரின் உள்துறை, சட்ட அமைச்சராக இருந்த திரு கா சண்முகத்துக்குப் புதிய அமைச்சரவையில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சர் பொறுப்பைத் திரு கா சண்முகம் துறக்கிறார்.
அவர் உள்துறை அமைச்சராகத் தொடர்வார் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று அறிவித்தார்.
மே 3 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இன்று சிங்கப்பூரின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
66 வயதாகும் திரு சண்முகம் 1988ஆம் ஆண்டு செம்டம்பர் மாதத்திலிருந்து சோங் பாங் வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.
மே 2008 முதல் தற்போது வரை சட்ட அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
2010ஆம் ஆண்டிலிருந்து உள்துறை அமைச்சராக இருந்துவருகிறார்.
மே 2008இல் இருந்து 2010 வரை உள்துறை அமைச்சில் இரண்டாம் அமைச்சராக இருந்தார்.
இம்முறை பொதுத்தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் அமைச்சர் சண்முகம் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணி 73.81 விழுக்காட்டு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது.
அங்கு போட்டியிட்ட ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சிக்கு ((RDU) 26.19 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன.

ஆதாரம் : Others