Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காலாங் பேசின் நீச்சல்குளம், St Wilfred விளையாட்டு நிலையம் மூடப்படும் - பொது வீடமைப்புக்காக இடங்கள் ஆராயப்படும்

வாசிப்புநேரம் -
காலாங் பேசின் நீச்சல்குளம், St Wilfred விளையாட்டு நிலையம் மூடப்படும் - பொது வீடமைப்புக்காக இடங்கள் ஆராயப்படும்

கோப்புப் படம்

காலாங் பேசின் நீச்சல்குளம், St Wilfred விளையாட்டு நிலையம் ஆகியவற்றின் குத்தகைக் காலம் முடிவுக்கு வரும்போது அவை மூடப்படும். பொது வீடமைப்பிற்காக அவ்விடங்கள் ஆராயப்படும்.

காலாங் பேசின் நீச்சல்குளம் செப்டம்பர் 1ஆம் தேதியன்றும் St Wilfred விளையாட்டு நிலையம் அக்டோபர் 1ஆம் தேதியன்றும் மூடப்படும்.

அது குறித்து SportSG அமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகரச் சீரமைப்பு ஆணையம் ஆகியவை இணைந்து அறிக்கை வெளியிட்டன.

அண்மையில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதனைச் சமாளிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் மாறிவரும் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப அரசாங்கம் சமூகத்துடன் இணைந்து விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்