Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலையும் சரித்திரமும் - காரைக்கால் லேன்

ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அருகே காரைக்கால் லேன் அமைந்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அருகே காரைக்கால் லேன் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் பிரமாண்டமாக காரைக்கால் மாளிகை அமைந்திருந்தது. 1920களில் செல்வாக்குமிக்க தனியார் வீடுகளில் ஒன்றாக காரைக்கால் மாளிகை திகழ்ந்தது.

பிரெஞ்சுத் துறைமுகமாக விளங்கிய காரைக்காலிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மூனா காதர் சுல்தான் அந்த மாளிகையைக் கட்டினார்.

வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்து வந்த அவர், அக்காலத்தில் இந்திய, இலங்கைத் தமிழர் சமூகத்தினரிடையே முக்கியத் தலைவராகவும் விளங்கினார்.

1917ஆம் ஆண்டில் மாளிகை வீட்டைக் கட்டுவதற்காக நிலத்தை வாங்கினார். அரை மில்லியன் வெள்ளி செலவில் 1920ஆம் ஆண்டில் அந்த மாளிகை எழுப்பப்பட்டது.

1947இல் மாளிகை கிராண்ட் ஹோட்டலாக மாற்றப்பட்டது. சிட் ரோடு சவுத் சாலைக்கும் செயிண்ட் பேட்ரிக் ரோட்டுக்கும் இடையிலுள்ள சந்திப்பில் அந்தக் கட்டடம் இன்றும் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்