Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காராங் கோணி - பழைய பொருள்களைத் தேடிச் சேகரிக்கும் தொழில்... புது யுகத்துக்குத் தயாராகிவிட்டது

வாசிப்புநேரம் -
காராங் கோணி - பழைய பொருள்களைத் தேடிச் சேகரிக்கும் தொழில்... புது யுகத்துக்குத் தயாராகிவிட்டது

(CNA / Gaya Chandramohan)

சிங்கப்பூரில் பழைய பொருள்களைத் தேடிச் சேகரிக்கும் காராங் கோணி (Karang Guni) தொழில் மறைந்து வருகிறது.

பொதுவாக லாபம் குறைவு... அதனால் ஆர்வம் குறைந்து வருகிறது. பழைய பொருள்களை விற்பதும் வாங்குவதும் குறைந்துவிட்டது. 

ஆனால் அந்தத் துறையிலும் வெல்ல முடியும் என்று புதிய தலைமுறை ஒரு கை பார்க்கிறது.

காராங் கோணித் துறை சற்று சிரமமானதுதான். அதில் கடும் உழைப்பு தேவைப்படும். 

அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் எப்படி அமையும் என்றே சொல்ல முடியாத நிலை இருப்பதால் ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்....

எல்லா நாளும் வியாபாரம் நடக்கும் என்றும் சொல்ல முடியாது. 

மாதத்தில் எட்டு நாள்கள் மட்டுமே வியாபாரம் நடப்பதாகச் சொல்கின்றனர் சிலர். மழையோ வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் வேலை பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். 

பழைய சுங்கை ரோடு வாடிக்கையாளர்களை நம்பிச் சிலரது வியாபாரம் நடைபெறுகிறது. ஆயினும் பழைய பொருள்களைத் தேடி வாங்கும் வாடிக்கையாளர்களைத் தேடிப்பிடிப்பது மிகப்பெரிய சவால். 

தந்தையரின் தொழிலை எடுத்து நடத்தும் சில பிள்ளைகள் புதிய உலகின் சவாலை எதிர்கொள்ள இணையத்தின் உதவியை நாடுகின்றனர். 

Instagram, Facebook போன்ற சமூக ஊடகத் தளங்களில் பழைய பொருள்கள் இணையச் சந்தையில் விற்பனையாகின்றன. 

குப்பை என்று கருதப்பட்ட ஒரு பழைய தொழில் இப்போது புதிய யுகத்துக்குத் தயாராகிவிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்