Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாய்களைச் செல்லப்பிராணியாகத் தத்தெடுக்க விருப்பமா? இனி மேலும் கடுமையான சோதனைகள் வரக்கூடும்

வாசிப்புநேரம் -
நாய்களைச் செல்லப்பிராணியாகத் தத்தெடுக்க விருப்பமா? இனி மேலும் கடுமையான சோதனைகள் வரக்கூடும்

(படம்: Pixabay)

நாய்களைச் செல்லப்பிராணிகளாகத் தத்தெடுக்க விரும்புவோர் இனி, மேலும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம்.

நாய்களைத் தத்தெடுக்க அவர்கள் பொருத்தமானவர்களா என்பதைத் தீர்மானிக்க, வீடுகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும். 

விலங்கு, கால்நடைச் சேவைகளின் புதிய வழிகாட்டி விதிமுறைகளில் அந்த நடவடிக்கைகளும் அடங்கும்.

நாய்களைத் தத்தெடுப்பது, வேறு இடங்களுக்கு மாற்றுவது,  பயிற்சி அளிப்பது போன்றவற்றில் சிறந்த நடைமுறைகளை வகுப்பது புதிய வழிகாட்டி விதிமுறைகளின் நோக்கம்.

அவற்றின்படி, தத்தெடுக்கப்படவிருக்கும் நாய்களின் மருத்துவப் பிரச்சினைகள், குணநலன்கள் பற்றி தெளிவாகத் தெரிவிக்கப்படவேண்டும்.

 தத்தெடுப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் சோதனைகளும் தத்தெடுக்கும் நடைமுறையும் சுமுகமாக இடம்பெற அது உதவும்.

நாய்களைத் தத்தெடுத்து வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பான பணிக்குழு, ஒரு மாதக் காலக் கலந்துரையாடலுக்குப் பிறகு, அந்த வழிகாட்டி விதிமுறைகளை வெளியிட்டது.

சுமார் 4,000 பேரிடமிருந்து கருத்துகள் திரட்டப்பட்டன.

அவர்களில் 90 விழுக்காட்டினர் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள்.

நாய்களைப் புதிய உரிமையாளர்களுக்கு மாற்றிவிடுவதற்குத் தேவையான அம்சங்களை விவரிக்கும் கொள்கைகளை வரையுமாறும் விலங்கு நலக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa