ஆசிரியர்களுக்கு 2% - 9% சம்பள உயர்வு - போதுமானதா?
படம்: CNA/Alvin Chong
கல்வியாளர்களுக்கான சம்பளம் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கும் துணைக் கல்வியாளர்களுக்கும் 2 விழுக்காடு முதல் 9 விழுக்காடு வரை சம்பள உயர்வு வழங்கப்படும் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
சம்பளத்தின் போட்டித்தன்மையை உறுதிசெய்ய அது போதுமானதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதை உறுதிசெய்யக் கல்வி அமைச்சு அவ்வப்போது சம்பளத்தை மறுஆய்வு செய்யும் என்று திரு லீ கூறினார்.
சம்பள மாற்றத்தைத் தவிர்த்து, ஆசிரியர் பணிக்கு அதிகமானோரை ஈர்க்க அமைச்சு முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு (2027) முதல் பட்டக் கல்விக்குப் பிந்திய பட்டயப் படிப்பு 16 மாதங்களிலிருந்து ஓராண்டுக்குக் குறைக்கப்படும்.
அத்தகைய முயற்சிகள் மூலம் சென்ற ஆண்டு 1,300க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதாகத் திரு லீ சொன்னார்.
2023இல் அந்த எண்ணிக்கை 600ஆக இருந்தது.