Skip to main content
Keppel நிறுவனத்தின் தலைவராக பியுஷ் குப்தா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Keppel நிறுவனத்தின் தலைவராக பியுஷ் குப்தா

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

DBS குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா (Piyush Gupta) வரும் ஏப்ரலில் கெப்பல் (Keppel) நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

நிறுவனத்தின் தற்போதைய தலைவர் டேனி தியோ (Danny Teoh) ஏப்ரலில் ஓய்வு பெறுவார்.

70 வயதாகும் திரு தியோ 15ஆண்டுகளாக இயக்குநர் பொறுப்பில் இருந்தார்.

அவர் தலைவராக இருந்த 5 ஆண்டுக் காலத்தில் கெப்பல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்மடங்குக்கு மேல் ஆனது.

திரு குப்தா, கெப்பல் நிறுவனத்தின் துணைத் தலைவராகச் சென்ற ஆண்டு ஜூலையில் பதவியேற்றார்.

அவர் 2009இலிருந்து சென்ற ஆண்டுவரை (2025) DBS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சேவையாற்றினார்.

திரு தியோவின் தலைமைத்துவத்தையும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் திரு குப்தா பாராட்டினார்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்