அறிவுத்திறன் குன்றியவர்களோடு சிறப்பான முறையில் உரையாட புதிய திட்டம்
MINDS இயக்கம் அறிவுத்திறன் குன்றியவர்களோடு மேலும் சிறப்பான முறையில் உரையாட ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)
MINDS இயக்கம் அறிவுத்திறன் குன்றியவர்களோடு மேலும் சிறப்பான முறையில் உரையாட ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
Key Word Sign என்பது திட்டத்தின் பெயர்.
சைகை மொழியைக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால் சைகை மொழி மட்டும் உரையாடலை முழுமை அடையச் செய்யாது.
அதற்கு பதிலாக, முக்கியச் சொற்கள் மீதும், கைகளின் சைகைகள் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட செயலை எளிமைப்படுத்த அந்த முறை உதவுகிறது.
அறிவுத்திறன் குன்றியோர் உரையாடுவதும், உணர்வுகளை வெளிப்படுத்துவதும் Key Word Sign திட்டத்தின் மூலம் எளிதாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் தான் அந்தத் திட்டம் முதன்முதலில் அறிமுகம் கண்டது.
திட்டத்தை சிங்கப்பூரர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க MINDS இயக்கம் உதவியுள்ளது.
உள்ளூரில் செவிப்புலன் குன்றியோர் அடிக்கடி செல்லும் உணவகங்கள், இடங்கள் ஆகியவற்றுக்கான சைகைகளை உருவாக்க MINDS இயக்கம் உதவியது.
திட்டத்தில் இதுவரை 1,500க்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாகக் கூறப்பட்டது.