தொடர்புத் திறன் குறைபாடு (autism) உள்ள பிள்ளைகளுக்கு - சிறப்புப் பள்ளி, வழக்கமான பள்ளி: எது சிறந்தது?
வாசிப்புநேரம் -
படம்: CNA/Clara Ho
தொடர்புத் திறன் குறைபாடு (autism) உள்ள பிள்ளைகளைச் சிறப்புப் பள்ளிகளில் (SPED) சேர்ப்பதை விட வழக்கமான பள்ளிகளில் சேர்க்கவே கூடுதலான பெற்றோர் விரும்புகின்றனர்.
வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 3.4 விழுக்காட்டுப் பிள்ளைகள் முன்னர் சிறப்புப் பள்ளிகளில் சேர்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என CNA செய்தித்தளம் கூறியது.
KK மகளிர், சிறார் மருத்துவமனையில் அதன் தொடர்பில் ஆய்வு நடத்திய டாக்டர் வோங் சுய் மே (Wong Chui Mae) ஒரு பள்ளியை விட இன்னொரு பள்ளி சிறந்தது எனச் சொல்லமுடியாது என்றார். ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிப்பட்ட தேவைகள் இருப்பதை அவர் வலியுறுத்தினார்.
Promises Healthcareஇல் மனோவியல் நிபுணராக வேலை செய்யும் சூ லின் டானிடம் (Su-Lynn Tan) CNA பேசியது.
சிறப்புத் தேவையுள்ள பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன்
பயிலும்போது அது அவர்களது நீண்டகால வளர்ச்சிக்குக் கைகொடுக்கலாம் என்றும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளும் தன்மையை (adaptation) வளர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இருந்தாலும் வழக்கமான பள்ளிகளில் பாடங்கள் கற்றுத்தரப்படும் வேகம், சுற்றுச்சூழல் ஆகியவை அவர்களுக்குச் சிக்கலாக அமையலாம் என்றார் அவர்.
அவர்கள் துன்புறுத்தல் சம்பவங்களுக்கும் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
காலப்போக்கில் பிள்ளையின் சுய மதிப்பு (self-esteem) பாதிப்படையலாம்; பள்ளிக்குச் செல்லும் ஆர்வமும் குறையலாம்.
சிறப்புப் பள்ளியாக இருந்தாலும் வழக்கமான பள்ளியாக இருந்தாலும் பிள்ளையின் தேவைக்கேற்பச் சரியான பள்ளியைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம் என நிபுணர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.

ஆதாரம் : CNA