KidSTART திட்டத்தின் கீழ் மேலும் 5,000 பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கப்படும் - பிரதமர் லீ
KidSTART திட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டுக்குள் மேலும் 5,000 பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
KidSTART திட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டுக்குள் மேலும் 5,000 பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சு இணையம் வழி நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
2016இல் தொடங்கப்பட்ட KidSTART திட்டத்தின் மூலம், குறைந்த வளங்கள் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதைத் திரு.லீ சுட்டினார்.
இதுவரை அந்தத் திட்டத்தின் கீழ் 2,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பலனடைந்துள்ளனர்.
திட்டத்துக்குத் தகுதிபெறும் குடும்பங்களுக்குத் தீவு முழுதும் அது கட்டங்கட்டமாக விரிவுபடுத்தப்படும் என்றார் திரு. லீ.
சிசுக்கள், பாலர்பள்ளிக் குழந்தைகள் ஆகியோருடன் பள்ளிகள் இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் கூறினார்.
சிரமப்படும் குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்குப் பள்ளிச் சூழல் அதிமுக்கியப் பங்காற்றுவதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.