1,800 குடும்பங்களுக்குச் சிறிய நூலகத்தை அன்பளிக்கும் KidSTART Stories திட்டம்
பிள்ளைகளின் இளம்பருவ வளர்ச்சியைக் கதை சொல்லுதல், வாசிப்பு ஆகியவைவழி ஊக்குவிக்கும் KidSTART Stories எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திட்டத்துக்குக்கீழ் 1,800 குடும்பங்களுக்கு வீட்டில் அமைக்கக்கூடிய சிறு நூலகங்கள் அன்பளிக்கப்படும்.
திட்டத்துக்கு KidSTART Singapore, SP குழுமம், EtonHouse சமூக நிதி ஆகியவை ஆதரவளித்துள்ளன.
வீட்டில் இருந்தவாறே பிள்ளைகள் வாசிப்பில் ஈடுபடுவதற்கு சிறு நூலகத்தை அமைத்துக் கொடுப்பது தகுந்த சூழலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
பிள்ளைகளுக்குப் பெற்றோர் கதை சொல்வதற்கான உத்திகளை எடுத்துரைக்கும் வகையில் KidSTART Singapore சில காணொளி வளங்களைத் தயாரித்துள்ளது.
இளம் பிள்ளைகள் இருவருக்குத் தாயாரான ஜயவள்ளி சண்முகம் பிள்ளைகளுடன் அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பழகுவது என்பதை கற்றுக்கொள்ள முடிந்ததாகச் சொன்னார்.
"திட்டத்தில் பிள்ளைகளுக்கு வழக்கம்போல் கதையை வாசிக்காமல் அதை வெவ்வேறு பாணிகளில் சொல்வது, பிள்ளைகளுக்குக் கேள்வி எழுப்புவது போன்ற உத்திகளைக் கற்றுக்கொள்ளமுடிந்தது," என்று அவர் தெரிவித்தார்.
பெற்றோருக்குக் கூடுதல் ஆதரவு வளங்களைத் தயாரிக்கப் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாக KidSTART சொன்னது.