Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துப்புரவுப் பணியாளர்களுக்குச் சுவையான தீபாவளி விருந்து... அம்மாவுக்கு யோசனை தந்த அன்புச் சிறுமி!

ஒவ்வொரு நாளும் நாம் வசிக்கும் இடங்களைச் சுத்தம் செய்வோரை எத்தனை பேர் கவனிக்கிறார்கள்?

வாசிப்புநேரம் -

ஒவ்வொரு நாளும் நாம் வசிக்கும் இடங்களைச் சுத்தம் செய்வோரை எத்தனை பேர் கவனிக்கிறார்கள்?

அவர்களிடம், சாப்பிட்டுவிட்டீர்களா என்பதை எத்தனை பேர் கேட்கிறார்கள்?

அவர்களைத் தாண்டிச் செல்லும் பலரும் அவர்களைச் சுற்றுப்புறத்தில் ஓர் அங்கமாகக் கருதி, முகங்கொடுத்துக்கூடப் பேசாமல் போவதைக் கவனிக்கலாம்.

திருமதி பிரியாவோ, துப்புரவுப் பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கத் தயாராகிறார்.

திருமதி பிரியாவும் அவரது கணவரும் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் பொதுவாகவே, ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வாங்கித்தருவது வழக்கம்.

பெற்றோரைப் போலவே அவர்களது மகளும் பிறருக்கு உணவு வழங்குவதில் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்!

அவர் 4 வயதிலிருந்து பிறருக்கு உணவு வழங்கிவருவது ஆச்சரியத்துக்குரியது.

சுற்றியிருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்குத் தீபாவளியை முன்னிட்டு உணவு வழங்கலாம் என்று சொன்னதே அவள்தான்

என்று கூறுகிறார் திருமதி பிரியா.

சிறுமி ரேயா, அவளுக்கு அளிக்கப்படும் பள்ளிப்பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்திருக்கிறார். அதில், துப்புரவுப்பணியாளர்களுக்கு உணவு தயாரிக்க 100 வெள்ளியையும் அளித்ததைப் பற்றி திருமதி பிரியா கூறினார்.

திருமதி பிரியாவுக்கு அவரது கணவரும் மகளும் உணவு தயாரிக்க உதவுவார்கள்.

மொத்தம், 11 துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்