ஒலிம்பிக் kitefoiling போட்டியில் சிங்கப்பூர் பதக்கம் வெல்லுமா? இன்று தெரிந்துவிடும்
பிரான்சின் மார்சே (Marseille) நகரில் நேற்று (8 ஆகஸ்ட்) நடைபெறவிருந்த kitefoiling எனும் நீர்சாகச விளையாட்டின் இறுதிச் சுற்று இன்றைக்கு (9 ஆகஸ்ட்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் விளையாட்டாளர் மெக்சிமிலியன் மேடெர் (Maximilian Maeder) அதில் களம் இறங்குகிறார்.
வேகமான காற்று இல்லாததால் போட்டி நேற்று சில முறை தள்ளிவைக்கப்பட்டது.
தகுதிச் சுற்றுகளில் இரண்டாம் நிலையில் வந்த 17 வயது மேடர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிச் சுற்றில், முதல் மூன்று நிலைகளில் ஒன்றை அவர் கைப்பற்றினால் சிங்கப்பூருக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்றுதந்த ஆக இளையவர் என்ற பெருமை அவரைச் சேரும்.
2016ஆம் ஆண்டு ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling) நீச்சலில் பெற்ற தங்கப் பதக்கத்துக்குப் பிறகு குடியரசு வெல்லும் முதல் பதக்கமாகவும் அது இருக்கும்.