Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிள்ளைகளின் தீக்காயங்களுக்கு முதல் மருத்துவச் சிகிச்சை நிலையம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தீக்காயங்கள் ஏற்படும் பிள்ளைகளுக்கென முதல் மருத்துவச் சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் விரைவாகச் சிகிச்சை பெற முடியும்; சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நேரமும் குறைக்கப்படும்.

நிலையத்தில் சிகிச்சை செயல்முறைகள் நெறிப்படுத்தப்படும். நோய் தொற்றுவதை மேலும் கட்டுப்படுத்த முடியும்.

உடனடியாக மட்டுமல்லாமல், பிள்ளைகளின் நீண்ட கால நலனைப் பார்த்துக் கொள்வதில் பிரிவுக்கு முக்கிய பங்கிருக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் KK மகளிர் சிறார் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 400 பிள்ளைகள் தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற வருகின்றனர்.

கடந்த ஆண்டு தீக்காயம் ஏற்பட்ட பிள்ளைகளில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெந்நீர், சூப் (soup), பானங்கள் ஆகியவற்றால் காயமடைந்தனர்.

எஞ்சியோருக்கு நேரடித் தீப்புண்களோ, தீயில் உரசியதால் ஏற்பட்ட புண்களோ ஏற்பட்டன.

வட அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே குழந்தைகளின் வலி நிவாரணத்துக்கான ChildKind சான்றிதழ் பெற்ற முதல் மருத்துவமனை KK.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்