Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

விலங்கியல் தோட்டத்தில் குரங்குகளின் குறும்பு, அவதிப்பட்ட உடும்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் உடும்பு, பொம்மைகளை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அது போன்ற சிக்கல் ஏற்படுவது மிகவும் அரிது.

மாரியோ என்றழைக்கப்படும் உடும்பைக் காப்பாற்ற விலங்குநல மருத்துவர்கள் நீண்ட நேரம் போராடினார்கள்.

என்ன நடந்தது?

விலங்கியல் தோட்டத்தில் இருந்த குரங்குகள், பொம்மை நிரம்பிய பையைக் கண்டன.

குரங்குகள் பொம்மைகளை அங்கும் இங்கும் வீசி குறும்பு செய்தன.

கூண்டைச் சுற்றி நடமாட்டம் அதிகரித்தது; அது மாரியோவின் கவனத்தைப் பறித்தது.

உடும்புகள் பதுங்கியிருந்து வேட்டையாடுவது வழக்கம்.

மாரியோ வேட்டையாடும் நோக்கில் இரண்டு பொம்மைகளை விழுங்கியது.

அது பின்னர் பொம்மைகளைக் கக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 24 மணி நேரம் கடந்தும் பொம்மைகள் வெளிவரவில்லை.

விலங்குநல மருத்துவர்கள் மாரியோவுக்கு அறுவைச்சிகிச்சை செய்யாமலேயே பொம்மைகளை அகற்றினர்.

மாரியோ தற்போது நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்