Koufu உணவு நிலைய Economy Rice கடைகளில் விலை வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்

CASE
Koufu உணவு நிலையங்களில் Economy Rice எனும் உணவை விற்பனை செய்யும் கடைகள் இனி ஒவ்வோர் உணவின் விலையையும் தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.
இறைச்சி வகை, கடலுணவு வகை, காய்கறிகள் என உணவைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் விலை போடவேண்டும்.
Economy Rice
இவ்வாண்டு இறுதிக்குள் 77 Koufu உணவு நிலையங்களிலும் இருக்கும் எல்லா Economy Rice கடைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அந்தப் புதிய நடைமுறையை இன்று அறிமுகம் செய்தது.
புதிய நடைமுறையின் வழி வாடிக்கையாளர்கள் உணவை வாங்கும்போது அவர்கள் செலுத்தும் கட்டணம் சரியானது என்பதை உறுதிசெய்ய உதவுகிறது.
Economy Rice கடைகளில் உணவிற்கு ஒரே விலை இருப்பதில்லை என்று CNA ஊடகம் இதற்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.
ஒவ்வோர் உணவிற்கும் விலையைத் தெரிவிக்கும்படி இணையத்திலும் சிலர் குறிப்பிட்டிருந்தனர்.