Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நாளை திருக்குட நன்னீராட்டு விழா... சில சுவைத் தகவல்கள்

வாசிப்புநேரம் -
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நாளை திருக்குட நன்னீராட்டு விழா... சில சுவைத் தகவல்கள்

படம்: கீர்த்திகா

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நாளை (1 ஜூன்) திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கும்பாபிஷேகத்தை நேரில் காண சுமார் 15,000 பேர் கோயிலுக்குச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதி நெருங்கிக்கொண்டிருப்பதால் நாளை முழுவதற்கும் மொத்தம் 35,000 பேர் கோயிலில் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முதியோர், உடற்குறையுள்ளோர் உட்பட அனைவருக்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கும்பாபிஷேகத்தை அமர்ந்து பார்க்க நாற்காலிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 10 மணியிலிருந்து அன்னதானம் வழங்கப்படும்.

அதற்காகக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong), நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா (Joan Pereira) முதலியோரும் கும்பாபிஷேகத்தில் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம்: பிரவினா
படம்: கீர்த்திகா
படம்: கீர்த்திகா
படம்: கீர்த்திகா

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்