Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

NTUC தலைமைச் செயலாளர் அமைச்சரவையில் இடம்பெறாதது "தற்காலிகமானது": பிரதமர்

வாசிப்புநேரம் -
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளராக இருப்பவர் அமைச்சரவையில் இடம்பெறாமல் இருப்பது "தற்காலிகமானது" என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

திரு இங் சீ மெங் அமைச்சரவையில் பின்னர் இணைவாரா என்பதை இப்போதே சொல்ல இயலாது என்றார் அவர்.

செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சரவையை அறிவித்த திரு வோங் அதுபற்றிப் பேசினார்.

பொதுவாகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் அமைச்சரவையில் பொறுப்பு வகிப்பது வழக்கம்.

திரு இங் தமக்கு அமைச்சரவையில் பொறுப்பு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அவரது கோரிக்கையை மதித்து அவருக்குப் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றார் திரு வோங்.

ஆனால் இது தற்காலிக ஏற்பாடு என்றார் அவர். விரைவில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார் என்றார் பிரதமர்.

அது எப்போது என்று கேட்கப்பட்டதற்கு அதைச் சொல்வது கடினம் என்றார் பிரதமர்.

ஆனால் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் தம்முடைய குழுவில் இருக்கவேண்டும் என்பது தமது விருப்பம் என்றார் திரு வோங்.

திரு இங் ஜாலான் காயு தொகுதியில் 51.47 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜாலான் காயு தொகுதியிலும் தொழிலாளர் இயக்கத்திலும் கவனம் செலுத்த விரும்புவதாகத் திரு இங் குறிப்பிட்டிருந்தார்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்